சென்ற மாதக் கட்டுரையில் வாழ்வின் மூன்று வகையான மனிதர்களும் அவர்கள் அல்லாத நான்காவது வகையான மனிதர்களும் எப்படி தம் வாழ்வின் திடதீர்மானத்தை பயன்படுத்தி அடுத்த பரிணாமத்தை அடைகிறார்கள் என்பத பார்த்தோம். அதில் முதல் வகை மனிதராக நான் அர்னால்டை முன்னுதாரணப்படுத்தி விவரித்து இருந்தேன். பொதுவாக சுயமுன்னேற்ற (Self Help) நூல் ஆசிரியர்கள் மற்றும் ஊக்கவாசகம் (Motivational quote) எழுதுபவர்களுக்கு இவர்களின் வாழ்வில் வரும் ஒவ்வொரு சொல்லும் வேதவாக்கு, ஆனால் இவர்கள் வாழ்வை உள்நோக்கி பார்த்தால் இவர்கள் வெற்றியின் வெறுமையால் படும் வேதனை தெரியும். இந்த கட்டுரையில் அடுத்த முக்கியமான இரண்டு பிரிவு மக்களை பற்றி விவரிக்க இருக்கிறேன்.

இந்தத் தொடரை நான் சாமானிய மக்களின் ஆரோக்கிய வாழ்வை மேம்படுத்த எழுதினாலும் நான் பாடிபில்டர்களின் வாழ்வை முன்னுதாரணமாகக் காட்டி எழுதுவதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன.
1) அடிப்படையில் நான் ஒரு பாடிபில்டிங் ஆர்வலர். வாழ்க்கை ஒருபெரும் அர்ப்பணிப்பு ஆகவும்அடிப்படையாக இருப்பது மறுக்க முடியாத உண்மை. ஏனெனில் முதல் Sandow பொதுமக்களுக்கு விடுத்த அழைப்பு என்னை போன்று நீங்களும் இந்த மாதிரியான அழகான ஆரோக்கியமான உடலமைப்பை பெறலாம் என்பதே ஆகும். இந்த உடற்பயிற்சி துறை உருவானதற்கு காரணமே இந்த காட்சி மனிதர்கள் தான் “The Growth of fitness industry start from show man” இதே துறை இன்று பாழாவதற்கு காரணமும் இவர்கள் தான், ஏனெனில் இவர்கள் மக்களை கவர மக்கள் மனதில் ஏற்படுத்திய போலி (விரைவாக உடல் எடை யை கூட்டுவது எப்படி (குறைப்பது எப்படி) நம்பிக்கைகள் உடற்பயிற்சி துறையை பாழாக்கிக்கொண்டிருக்கின்றன. “The Transformation of showman to Con Man spoilsthe industry”. அப்ப பாடிபில்டர்களை நம்புங்கன்னு சொல்றீங்களா இல்ல நம்பாதிங்கன்னு சொல்றீங்களா? நான்அப்படி சொல்லலைங்க. தங்கள் வாழ்வில் அடைந்த வெற்றிகளுக்கு தங்கள் பாடிபில்டிங் கலை எப்படி உதவியாக இருந்தது, தாங்கள் அடைந்த தசை வளர்ச்சிக்கு எத்தனை ஆண்டுகள் ஆகின, இந்த முன்னேற்றத்திற்கு அவர்கள் பின்பற்றிய பயிற்சிமுறை, உணவு முறைகளைக் கூறி மேலும் தாங்கள் ஸ்டெராய்டு பயன்படுத்திய உண்மையையும் ஒத்துக்கொள்ளும் துணிவு உள்ளவர்களை பின்பற்றுங்கள்.

இவர்களின் வெற்றிக்கு ஸ்டெராய்டு ஒரு காரணம் தவிர ஸ்டெராய்டுதான் காரணம் என்று சொல்ல முடியாது. இன்று எந்த விளையாட்டுத் துறையை எடுத்துக் கொண்டாலும் அதில் ஊக்க மருந்து ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. என்னுடைய கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்க நினைப்பவர்கள் Bigger Stronger and faster என்ற ஆவணப்படத்தை (Documentry) Youtube-பில் ஒரு முறை பார்த்து விட்டு சொல்லுங்கள். இந்த உண்மையான பாடிபில்டர்களை தவிர்த்து “நான் நேச்சுரல் பாடிபில்டர். இந்த ஒரு டப்பாவை பயன்படுத்தி 15 பவுண்ட் தசையை கூட்டினேன்; 20 பவுண்டு கொழுப்பை குறைத்தேன்; என்னுடைய ரகசிய பயிற்சி முறையை பயன்படுத்தி பைசப்ஸ் 2 இன்ச்சை நாலு வாரத்தில் கூட்டலாம். நான் ஒரு டிரக் எக்ஸ்பார்ட் (Drug Expert)” என்று மார்தட்டும் போலிகளை நம்பாதீர்கள். ஐயோ நான் முதல் காரணத்தை சொல்லப் போய் எங்கேயோ சென்று விட்டேன் என்னுடைய இரண்டாவது காரணம் என்னவென்றால்
2) எனர்ஜி பிட்னஸ் என்று ஜெய்சார் சொன்னாலும் பெரும்பாலான வாசகர்கள் பாடிபில்டிங் இருக்கிறார்கள். ஆர்வலர்கள் ஆகவே இருக்கிறார்கள்.
3) நான் தேர்ந்தெடுத்திருக்கும் இந்த மூன்று கதாநாயகர்களும் என்னுடைய கட்டுரையின் தலைப்பிற்கும் உதாரணத்திற்கும் மிகவும் பொருத்தமானவர்கள்,

“சார் ஒருத்தரை வைத்து ஒரு ‘மாசம் ஒட்டுறீங்க. இன்னும் இரண்டு பேரை வைத்து ஈசியா இரண்டு மாசம் ஓட்டுவீர்கள் சூப்பர்”.
“உனக்கு கதைவேணும்னா கதை இருக்கு கருத்து வேணும்னா கருத்து இருக்கு. ரெண்டும் இருக்குல்ல. அப்புறம் நான் எத்தனை மாசம் ஓட்டினால் என்ன?”
சாரி, நான் மற்ற இரு வல்லவர்கள் யார் என்று இதுவரை சொல்லவில்லை
1Ronnie coleman 2, Dorian yates. நான் தனிப்பட்ட முறையில் இந்த மூன்று (Amold) பேருடைய தீவிர ரசிகன். ஆனால் வெவ்வேறு காலகட்டத்தில் அவர்கள் வாழ்வில் எடுத்த திட தீர்மானம் அவர்களை எப்படி மாற்றி அமைத்தது என்பதை விவரிப்பதே என்னுடைய நோக்கம். இந்த ஒப்புநோக்கும் பார்வையில் ஒருவரை உயர்த்தியும் ஒருவரை தாழ்த்தியும் பேச நினைப்பது என் எண்ணம் இல்லை. நான் Dorian, அர்னால்டை பற்றிமுடித்துவிட்டேன். அடுத்ததாக நான் வாழ்வையும் அவர் வாழ்வில் எடுத்த திடதீர்மானங்கள் எத்தகைய வாழ்க்கை முறை மாற்றத்திற்கு எடுத்து சென்றது என்பதையும் பார்ப்போம். பிரிட்டனின் ஒருசிறு நகரமான Berminghan-ல் பிறந்து வளர்ந்தவர்தான் Dorian, Amold, Romie, Dorian இந்த மூவருமே நமது வாழ்வின் மூன்றாவது நிலை மனித சமுதாயத்தில் வாழ்வை துவங்கி முன்னேறியவர்கள்தான் (அது தான் பாஸ் பிறந்தோம் வாழ்ந்தோம் செத்தோம் குரூப்). சிறுவயதிலேயே தன் தந்தையின் இழப்பின் காரணமாக குடும்பத்தை விட்டு பிரியும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார் Doran 16 வயதில் பொறுப்பற்ற தன் நண்பர்களுடன் சில தவறான காரியங்களில் ஈடுபட்டு சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டார். எந்த விதமான அடிப்படை கல்வியும் இல்லாமல் அவர் வாழ்க்கை சிறையில் துவங்கியது. அந்த சிறையில் Wardon கேட்ட கேள்விக்கு அவர் எடுத்த திட தீர்மானமே அவர் தொடர்ந்து வந்துவந்து போகலாம் அல்லது இந்த நிலையை ஒழித்து வாழ்வில் முன்னேற்றம் அ–ை வாழ்வின் அடிப்படையாக அமைந்தது. “நீ ஒன்று இதே போல் சிறிதும் பெரிதுமாக தவறுகள் செய்து சிறைக்கு டயலாம் நீயே முடிவு செய்து கொள்” என்று அந்த சிறுவனிடம் warden கூறினார். அன்று dorian எடுத்த திடதீர்மானம் இனி நான் சிறைக்கு வரமாட்டேன் என்பது தான். அதனால் சிறையில் இருந்த காலத்தில் ஒழுங்காக உடற்பயிற்சி செய்து மேலும் தன் உடல் வலிமையைப் பெருக்கிக் கொண்டார். 14,15 வயதிலிருந்து அடிப்படை Power lifting பயிற்சிகளை செய்து தன் உடலை ஆரோக்கியமாகவும் வலுவாகவும் வைத்து இருந்தார் dorian, மரபியலில் நல்ல சாதகமான அமைப்பு இருந்ததால் அவருடைய தசைகள் அழகாகவும் வலுவாகவும் மிக விரைவில் மாறத் தொடங்கின.

சிறையிலிருந்து வெளிவந்த சிறிது காலத்தில் ஏற்பட்ட தன் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர் களின் தொடர்மரணம் அவருக்கு மேலும் மன அழுத்தத்தை ஏற்படுத்தியது. இருந்தும் தன் திடதீர்மானத்தை மேலும் திடமாக ஆக்கிக் கொண்டு தான் உலகின் நம்பர் ஒன் பாடிபில்டராக உருவாக வேண்டும். பாடிபில்டிங் க-ை லயை வாழ்க்கை முறையாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தார். 56 வயது doin-ஐ ஒரு பேட்டியில் நீங்கள் 20 வயது Dorian-க்கு கால் செய்து அட்வைஸ் செய்தால் நீங்கள் என்ன சொல்வீர்கள் என்று கேட்டதற்கு “நான் உண்மையாக சொன்னால் எந்த அட்வைஸும் செய்ய விரும்பவில்லை. அந்த இரும்பு மன உறுதி கொண்ட Dirian இல்லை. என்றால் இன்று நான் இல்லை கேள்விக்கு பதிலாக ஏதாவது சொல்ல நினைத்தால் நான் இதைத்தான் சொல்வேன், Dorian உன் வாழ்வில் அவ்வளவு இறுக்கம் தேவையில்லை அவ்வப்போது உன்னை நீ ரிலாக்ஸ் செய்துகொள். இரண்டாவது பாடிபில்டிங்கை 20 வயதில் தொழில் முறையாக எடுத்துக்கொள்ள முடியாது. ஏனெனில் மிகச் சிலரே இந்த முறையில் வெற்றி பெற்றிருக்கிறார்கள் நீங்கள் ஒலிம்பியாவில் பரிசு பெற்றால் கூட இது மிகக்கடினம். முதல் பரிசு வாங்கியவர்களைத் தவிர்த்து அடுத்தவர்களை யோசித்துப் பாருங்கள். அவர்கள் செலவு செய்த பணம் கூட திரும்பி வந்து இருக்காது. நீ வேண்டுமானால் ஒரு தேசிய அளவிலான போட்டியில் வெற்றி பெறவேண்டும் என்று முடிவு செய்துகொள். அந்த குறிக்கோளை அடைந்த பிறகு வேண்டுமானால் இதை தொழில் முறையாக மாற்றிக்கொள் என்று சொல்வேன்“ என்றார். இந்த உண்மை தான் என்னை Dorian-ஐ நோக்கி ஈர்க்க அடிப்படை காரணமாக அமைந்தது.

20 வயதில் உற்றார் உறவினர்கள் தன் நண்பர்களை பிரிந்து Bermingham மில் பாடிபில்டிங் அவருக்கு எந்த குருவும் இல்லை. தவவாழ்வை மேற்கொண்டார். டொரியன் ஏகலைவன் ஒரு தன்னுடைய பாடிபில்டிங் துறைக்கு தேவையான அறிவு சார்ந்த விஷயங்களை தானே தேடி கற்று பழகிக் கொண்டார். இன்டர்நெட் இல்லாத அந்த கால கட்டத்தில் புத்தகங்களையும் பத்திரிகைகளையும் அறிவுப் பசிக்கு தீனி ஆக்கிக் கொண்டார்.
The Cognitive ability of Dorian is matchless என்று Charles Poliuine பாராட்டியுள்ளார். கற்றறிந்த விஷயங்களை வெறும் அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ளாமல் அனுபவமாக மாற்றிக் கொண்டார். மேலும் தன்னுடைய குறிக்கோளை அடைய எந்த முறை சிறந்தது என்று தேர்வு செய்யும் மதிநுட்பம் உள்ளவராக இருந்தார். தான் செய்யும் விஷயங்களில் தவறு இருந்தால் எந்த நேரத்திலும் அதை மாற்றி கற்கும் (unleam) துணிவு படைத்தவராகவும் இருந்தார். பயிற்சி முறைகள் உணவு முறைகள் மற்றும் Drug Science என்று பாடிபில்டிங் அனைத்து நுட்பங்களையும் எந்த ஒரு குருவோ Coacher-சோ நேரடி துணை இல்லாமல் தன்னைத் தானே ஒலிம்பியா மேடை வரை தயார் செய்து கொண்டார். நான் டொரியன் ஒரு ஏகலைவன் என்று சொல்ல ஒரு காரணம் உண்டு. அவருக்கும் ஒரு துரோணர் இருந்தார், அவர்தான் Bracket Begin Mike Mentzer. (என்னடா ஹரி சார் ரொம்ப நாளா இந்த மந்திரத்தை பயன்படுத்தவில்லையே என்று நினைத்திருந்தேன்). Mike Mentzer இன் புத்தகங்களைப் படித்து தன்னை High Intensity பயிற்சி முறைகளுக்கு உட்படுத்தி டொரியன் தன்னை ஒலிம்பியா மேடைக்கு தயார் செய்துகொண்டார். முதலில் எல்லாரும் வால்யூம் ட்ரைனிங் தான் செய்தார்கள். பிறகு HIT பின்பற்றி சிறிது முன்னேற்றம் கண்டார்கள், இதெல்லாம் ஒரு (போலியான கருத்து) என்று யாராவது சொன்னால் டொரியன் செவிட்டிலேயே அறைவார். ஏனெனில் டொரியன் ஆரம்பகாலம் முதலே ஹிட் பயிற்சி முறைகளை தான் பின்பற்றி வந்தார். இதற்கு ஆதாரமாக அவர் இத்தனை ஆண்டுகளாக மெயின்டெயின் செய்துவந்த Training log காட்டுவார். The Dorian was born and braught up in HIT எந்த ஒரு பயிற்சி திட்டத்தையும் டொரியன் தனக்கு ஏற்றார் போல் மாற்றி அமைத்துக் கொள்வார். அப்படி அவர் மாற்றி உருவாக்கிய பயிற்சி திட்டமே Dy HIT.

டொரியன் மிஸ்டர் ஒலிம்பியாவிற்கு தயார் செய்வதற்கே ஒரு வாரத்திற்கு மூன்றரை மணிநேரத்திற்கு மேல் பயிற்சி செய்தது இல்லை. நான்கு நாட்கள் Con test சமயத்திலும் மூன்று நாட்கள் ஆப்சீசனிலும் பயிற்சி செய்வார். ஒவ்வொரு பயிற்சி நாளிலும் இரண்டு தசைத் தொகுதிகளுக்கு மொத்தம் 12 முதல் 14 செட்டுகள் தான் செய்வார். மொத்த பயிற்சி திட்டமும் 45 நிமிடத்திற்கு மேல் நீடிக்காது. ஆனால் இந்த 45 நிமிடங்களில் தசைகளை High intensity-யில் கதற வைத்து விடுவார். பயிற்சி தீவிரத்திற்கு ஏற்றார் போல் இரண்டு முதல் மூன்று நாட்கள் பயிற்சிக்கு நடுவில் இடைவெளி விட்டு விடுவார். இந்த இடைவெளி நாட்களில் தேவையான அளவு cardio மட்டும் செய்வார் (மணிக்கணக்கில் அல்ல). இந்த பயிற்சி தீவிரத்தை சரி கட்ட துல்லியமான அளவு ஊட்டச்சத்தை எடுத்துக் கொள்வார். ஒவ்வொரு Meal-லையும் எடை போட்டு உட்கொள்வார். பயிற்சி உணவு – அதில் ஏற்படும் ஒவ்வொரு மாற்றத்தையும் குறிப்பெடுத்துக் கொள்வார். ஒவ்வொரு முறை நேர்மறை மற்றும் எதிர் மறை மாற்றங்களுக்கு ஏற்றார் போல் சிறுசிறு மாற்றங்களை ஏற்படுத்தி தொடர்ந்து முன்னேற்றம் காண்பார். 1986களில் British Heavy Weight Champion தொடங்கிய வெற்றி ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து 1991இல் தான் ஏறிய முதல் ஒலிம்பியாவில் இரண்டாவது இடம்பெற்றார். எட்டு முறை தொடர்ந்து Olympia வென்ற Lee Hancy-க்கு அடுத்ததாக வந்தார். 1992 முதல் தொடங்கிய அவருடைய ஒலிம்பியா வெற்றிப்பயணம் 97 வரை தொடர்ந்து ஆறுமுறை நிகழ்ந்தது. இந்தப் பத்தாண்டு காலமும் டொரியனுக்கு நண்பர்கள் இல்லை உறவினர்கள் இல்லை பொழுதுபோக்கு இல்லை. சொல்லப் போனால் அவர் பாடிபில்டிங்கை உண்டு உறங்கி உடுத்தி வாழ்ந்தார். இதை அவர் Tunnel like focus என்று அடிக்கடி சொல்வார். இந்த மன ஒருமைப்பாடும் உறுதியுமே ஒலிம்பியா மேடைகளில் மனித வரலாற்றில் இதுவரை கண்டிராத உடலமைப்புடன் டொரியன் காட்சியளிக்க காரணமாக இருந்தது. இன்னும் சொல்லப் போனால் இந்த 300 பவுண்டு பாடிபில்டிங் அசுரர்களுக்கு வித்திட்டவர் பொரியன்தான். பாடிபில்டிங் உலகில் அனைவருக்கும் கிடைத்த அதே சப்ளிமென்ட், பயிற்சி S உபகரணங்கள், உணவு முறைகள், பயிற்சி திட்டங்கள் மற்றும் ஸ்டெராய்டுகள் தான் டொரியனுக்கு கிடைத்தது. ஆனால் அவரால் மட்டும் இந்த அசுரத்தனமான உடலை எப்படி உருவாக்க முடிந்தது? இதற்கு அடிப்படை காரணம் அவரின் மன ஒருமைப்பாடும் திடதீர்மானமுமே காரணம். இந்த அசுரத்தனமான உடல்வாகின் காரணமாக கிளாசிக் பாடிபில்டிங்-ஐ இவர்தான் கெடுத்தார் என்ற குற்றச்சாட்டிற்கு இவர் ஆளானார்.

இதற்கு இவர் கூறும் பதில் : “ஆம் நானும் Ronnie-யும் கிளாசிக் பாடிபில்டிங்-ஐ முழுவதாக கெடுத்து விட்டது உண்மைதான். இதற்கு அடிப்படை காரணம் ரசிகர்கள் இந்த அசுரத்தனமான உடல்வாகை விரும்பினார்கள். அதைத்தான் நானும் Ronnie-யும் அளித்தோம். ஆனால் இந்த ட்ரெண்ட் இப்பொழுது மாறி வருகிறது. அதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். பொரியனை ஒவ்வொரு ஒலிம்பியா மேடை தவிர மற்ற மற்ற சமயங்களில் எங்கும் காணமுடியாது. ஏனெனில் Bermingham-இல் உள்ள அவருை டய Temple Giym-ல் யாருமில்லாத போதுதான் பயிற்சிகளை மேற்கொள்வார். மற்றபாடிபில்டர்கள் கலிபோர்னியாவில் உள்ள வெனிஸ் Gymமற்றும் Goldஜிம்மில் அன்றாடம் காட்சி அளிப்பார்கள்… மேலும் ‘எந்த பொது நிகழ்ச்சி பேட்டி மற்றும் பாடிபில்டர்களின் பத்திரிகைகளில் – புகைப்படங்களில் கூட வரமாட்டார்.ஒவ்வொரு ஒலிம்பியா மேடைகளிலும் தன்னுடைய அசுரத்தனமான உடல் கட்டுடன் நிழல் போல வந்து அனைவரையும் பயமுறுத்துவார். இந்த செயல்முறையே இவருக்கு The Shadow என்ற புனைப் பெயரைப் பெற்றுத் தந்தது. என்னுடைய உடல் ஒரு கலைப்படைப்பு. அது முழுமை பெறாதவரை நான் யாருக்கும் அதை காட்ட விரும்பவில்லை என்று இதற்கு காரணம் கூறுவார். ஒரு சிற்பியோ ஓவியனோ இதே மனநிலையுடன்தான் இருப்பான். தங்கள் படைப்பு முழுமை பெறாதவரை அதை வெளி உலகத்திற்கு காட்டமாட்டார்கள்.

டொரியன் முகத்தில் சிரிப்பை, அழுகையை எந்த ஒரு காலத்திலும் அவர் காட்டியதே கிடையாது.ஒலிம்பியா மேடைகளில் கூட தன்னுடைய இறுக்கமான முகத்துடன் Pose செய்வார். இந்த டெர்மினேட்டர்ஸ்டைல் Posing இவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. பொதுவாக முதல்முறை ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றி பெறும் அனைவரும் மேடையில் தங்கள் ஆனந்த கண்ணீரை வெளிப்படுத்துவது சகஜம். வாழ்வின் இத்தனை சவால்களுக்கு பிறகு அவர் அடைந்த வெற்றியின் பொழுது கூட முகத்தை இறுக்கத்துடன் வைத்திருந்தார். வாழ்வின் இத்தனை சவால்களுக்கு பிறகும் அவர் அடைந்த முதல் ஒலிம்பியா வெற்றியின் பொழுது அவர் கொடுத்த Reaction என்ன தெரியுமா? Lunging Pose. தன் உதட்டை கடித்தபடி வாயில் விரலை வைத்து காட்டினார். ஏனெனில் அந்த மேடையில் அவர் தன் உணர்வுகளை கண்ணீர் மூலம் காட்ட விரும்பவில்லை. அவ்வளவு அழுத்தக்காரர்.
“போதும் சார் உங்கள் டொரியன் புகழாரம். இந்த கதையில் நீதி ஒன்றுமில்லை. மிஞ்சிப் போனால் இவரும் ஒரு பாடிபில்டிங் Maniac அவ்வளவுதான் “.
நோ பிரதர். இனிமேதான் Story-யில் Twist இருக்கு. பொதுவாக பாடிபில்டர்கள் ஒரு Narcissist கள். தங்கள் வாழ்நாள் முழுவதும் தங்களைத் தாங்களே ரசித்துக் கொண்டு தாங்கள் பெற்ற இந்த உடல் அழகை வெளிக்காட்டிக் கொள்வதில் பெரும்பாலான நேரத்தை செலவிடுவார்கள். மிஸ்டர் ஒலிம்பியா என்றால் அந்த ஈகோ எவ்வளவு அதிகமாக இருக்கும். லைட்டா ஆம்ஸ் ஏறினால் கூட நாம் சட்டையை மடித்து விடுவதில்லையா? இப்படிப்பட்டcgd ஒரு injury காரணத்தால் இனிமேல் பாடிபில்டிங்கை தான் விட்டுவிட வேண்டும் என்ற முடிவுக்கு வரும்பொழுது எவ்வளவு வேதனைக்கு உள்ளாகும் ?

எந்த பயிற்சி செய்தாலும் அதை 100% பயிற்சி தீவிரத்துடன் செய்யும் உலக சாம்பியன், இருக்கும் தசைகளை Maintain செய்வதே போதும் என்ற நிலைக்கு தள்ளப்படும் போது என்ன மாதிரியான மனநிலைக்கு தள்ளப்படுவார். இதிலிருந்து அவர் எப்படி மீண்டு வந்தார்? இந்த பாடிபில்டிங் வாழ்க்கை முறைக்கு டோரியன் எங்கிருந்து வருமானம் பெற்றார்? Ronnie-யின் வாழ்க்கையோடு ஒத்துப் பார்க்கும் பொழுது டொரியன் எந்த நிலையில் தன் வாழ்வின் திடதீர்மானத்தை ஏற்று வாழ்க்கையை எப்படி அடுத்தவர்களுக்கு முன்னுதாரணமாக மாற்றி அனைவரையும் தன்பால் ஈர்த்துக் கொண்டார் ?
மிஸ்டர் ஒலிம்பியாவான டொரியனை விட இன்று லண்டன் ரியல்டோரின் நிறைய மக்களுக்கு எப்படித் தெரிய வந்தது? போன்ற பலபல சுவாரசியமான கேள்விகளுக்கு அடுத்த மாதம் விடை காணலாம்.

ஹரிஹரன் உடற்பயிற்சி துறையில் நீண்டகாலம் அனுபவம் உடையவர். ISSA CFT certificate பெற்றவர். சென்னையில் Lifefit Academy for fitness Professional என்ற நிறுவனத்தின் மூலம் ISSA CFT உட்பட பல உடற்பயிற்சி சார்ந்த கல்விகளை கற்றுக் கொடுக்கிறார். பர்சனல் ட்ரெய்னிங்கும் கொடுக்கிறார்.