வாழ்க்கை முறை மாற்றத்திற்கான திடதீர்மானம் The Will of The King (Ronnie coleman) (Part-4) K.HARIHARAN NASM CPT

பாடிபில்டிங் உலகின் ஒலிம்பியா மேடைகளை மூன்று பெரும் சகாப்தமாக பிரிக்கலாம். அதில் முதல் சகாப்தமாக ஏழுமுறை ஒலிம்பியாவில் வென்ற அர்னால்டை சொல்லலாம். இரண்டாவது சகாப்தமாக எட்டுமுறை ஒலிம்பியாவில் வென்ற Lee Hlaney-யும், மூன்றாவது சகாப்தமாக எட்டுமுறை வென்ற The King ரோனியை சொல்லலாம். ஏனைய பல பாடிபில்டர்கள் இருந்தாலும் இந்த மூவரும் ஒலிம்பியா மேடையின் மைல்கல்லாக நிரந்தரமாக உள்ளார்கள். அசுரத்தனமான உடல்கட்டுக்கு டொரியன் வித்திட்டு இருந்தாலும், அந்த trend-டை நிரந்தரப்படுத்திய ஏகபோக உரிமை ரோனியை சேரும். இதனால் தான் இன்றளவும் ரோனியை The King என்று அழைக்கிறார்கள். இந்த சிம்மாசனத்திற்கு அவர் கொடுத்த விலை மிக அதிகம். இதைத் தான் நாம் இந்த மாத கட்டுரையில் பார்க்க விருக்கிறோம். கடந்த 12 ஆண்டுகளாக ஒலிம்பியா மேடை ரசிகர்களுக்கு எந்த ஒரு பெரிய ஆச்சரியத்தையும் ஏற்படுத்தவில்லை. இன்னும் சொல்லப்போனால் இந்த Mass Monster டிரென்ட் கூடிய விரைவில் முடிவுக்கு வந்தாலும் சொல்வதற்கில்லை. இப்பொழுது Mens Physique (மாடல் போன்ற உடலமைப்பு கொண்ட பாடிபில்டிங் போட்டி), Classic Bodybuilding (உயரத்துக்கு ஏற்ற தசை அமைப்பு உள்ள பாடிபில்டிங் போட்டி) போன்ற பிரிவுகள் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

நம் கட்டுரையின் ஏனைய நாயகர்களைப் போல ரோனியும் தன் வாழ்க்கையை வறுமைக்கோட்டிற்கு கீழ் தான் துவங்கினார். May 13, 1964ஆம் ஆண்டு பிறந்தார்ரோனி. இவருடைய இளமைக்கால வாழ்க்கையைப் பற்றி எந்த ஒரு பெரிய தகவலும் இல்லை. அடிப்படையில் இவர் ஒரு கணக்கியல் பட்டதாரி. இவருடைய கல்லூரி காலத்தில் பல்கலைக்கழக அளவிலான அமெரிக்கன் ஃபுட்பால் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இவருடைய கல்வித் தகுதிக்கு சரியான வேலைவாய்ப்பு அமையாததால் Dominos Pizza-வில் டெலிவரி வேலைக்கு சென்று அங்கு கிடைக்கும் இலவச pizza-வை தனக்கு உணவாக பயன்படுத்தி தன் வறுமை காலத்தை தள்ளியுள்ளார். பிறகு 1989-ஆம் ஆண்டு டெக்சாஸ் மாநில காவல்துறையில் காவலர் பணிக்கு சென்று வந்தார். இந்த பணியில் இவர் 2003 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து உள்ளார். இவருடைய இளமை காலத்தில் நிறைய பவர்லிப்ட்டிங்க் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இவருடைய உடல் பிரிவுகளில் மிகவும் வலிமை பொருந்திய பவர்லிப்டராக திகழ்ந்துள்ளார். இதன் காரணமாக இவர் பெற்ற நல்ல உடல்வாகும் அதிகப்படியான வலுவும் இவருடைய பாடிபில்டிங் வாழ்க்கைக்கு ஒரு படிக்கல்லாக அமைந்தது.இவருடைய இந்த பவர்லிப்டிங் ஆர்வத்தையும் உடலமைப்பையும் பார்த்த இவருடைய துணைகாவலர்Gustavo அவருடைய நண்பரின் உடற்பயிற்சிக்கூடம் ஆன Metro Flex-ல் ரோனியை சேர்த்து விட்டார். இந்த உடற்பயிற்சி கூடத்தின் உரிமையாளரான Brain Dob son ரோனியை ஜிம்மின் நிரந்தர உறுப்பினராக சேர்த்துக் கொண்டார். இதற்கு மாறாக கை ரோனியை தன்னை மிஸ்டர் டெக்சாஸ் போட்டிக்கு தயார் செய்யுமாறு கேட்டுக்கொண்டார் (அதாவது ட்ரெய்னிங் பார்ட்னர்). Dob son உடன் சேர்ந்து பயிற்சியில் ஈடுபட்ட ரோனி அந்த மிஸ்டர் டெக்சாஸ் போட்டியில்தானும்கலந்துகொண்டார். ரோனியின் உடல்வாகு காரணமாக தான் ஏறிய முதல் மேடையிலேயே 1990ஆம் ஆண்டு மிஸ்டர் டெக்சாஸ் பட்டத்தை வென்றார். இதில் என்ன ஒரு சிறிய Twist என்றால், அவர் தன் ட்ரெய்னிங் பார்ட்னரான Dobson-Gu வெல்ல வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார். இதை விளையாட்டு மனப்பான்மையுடன் ஏற்றுக்கொண்ட Dobson ரோனிக்கு ஒரு நிரந்தர ட்ரெய்னிங் பார்ட்னர். ஆகவே மாறினார். இவருக்கு முதுகுத்தண்டு காயம் ஏற்பட்ட பிறகு கூட இவர் பயிற்சிகளை Metrolex ஜிம்மிலேயே தொடர்ந்தார்.இன்றுவரை அங்கு போய் பயிற்சி செய்யும்பொழுது’ அவருக்கு ஏதோ ஒரு வகையான ஆத்ம திருப்தி ஏற்படுகிறது. இப்படித் துவங்கிய இவருடைய பாடிபில்டிங் 2007ஆம் ஆண்டு வரை தொடர்ந்தது. அதாவது ஆண்டுகள். ஆண்டுகளில் ஒருமுறை தான் 2006 ஆண்டு jay cut ler-ரிடம் பதக்கத்தை தவறவிட்டார். பத்தாண்டுகள் Card இல்லாமலும் எட்டாண்டுகள் ப்ரோகார்டுடனும் இவருக்கு வெற்றி தொடர்ந்தது. நிச்சயமாக Lee Haney-யின் சாதனை முறியடிப்பார் என்ற எதிர்பார்ப்பு பாடிபில்டிங் பரவலாக இருந்தது.இந்த எதிர்பார்ப்பை செய்யும் முயற்சியே இவருடைய பாடிபில்டிங் வாழ்க்கைக்கு ஒரு கட்டியது. அதுமட்டுமல்லாமல் முடக்கிப்போட்டது. ரோனி தன் வாழ்வில் எடுத்த தவறான திடதீர்மானங்களால் அவர் வாழ்வை எங்கு விட்டு சென்றது என்பதை ஒவ்வொன்றாக பார்ப்போம்.

1.தன்னுடைய லட்சியத்தை அடையும் நோக்கத்தில் தன் வயதை கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை.

26 வயதில் பாடிபில்டிங் துறைக்குள் வந்து 43 வயது வரை ப்ரொஃபெஷனல் கொண்டார். பிறகும் ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து தன் எடையை நிலையில் முயற்சி செய்தார். இது அவருடைய Guest Posing-களுக்கும், அவருடைய சப்ளிமென்ட் கம்பெனியின் விளம்பரத்துக்கும் உதவியாக இருக்கும் என்று அதே உடல் எடையை மெயின்டெயின் செய்து வந்தார். பொதுவாக எந்த ஒரு விளையாட்டுத் துறையிலும் பிரகாசிக்க வேண்டும் என்றால் 20 முதல் 30 வயது வரை தான் சரியான காலம். அதிகபட்சம் தள்ளினாலும் 35 வரை தான். ஏனெனில் இளமை காலம் முதல் தொடர்ந்து செய்து வந்த கடுமையான பயிற்சிகள் அவர்கள் உடலில் அதன் விளைவை காட்ட துவங்கும். இதை உணராமல் அவர்கள் போட்டிகாலத்தை நீட்டிக்க முயற்சி செய்தால் அது அவர்களின் உடலில் நிரந்தர பாதிப்பை ஏற்படுத்தி விடும்.

2) பாடிபில்டிங் பயிற்சிகளில் பவர்லிஃப்டிங் அணுகுமுறைகளை மேற்கொண்டது

அதாவது அதிகமான எடையில் நிறைய Repetition செய்ய முயற்சித்தல் (அப்போ அப்படி செய்யக் கூடாதா) தேவையில்லை, பயிற்சி தீவிரத்தை அதிகரிக்க நிறைய பாதுகாப்பான முறைகள் இருக்கிறது.முதல் பிரச்சனைக்கு உள்ளானது. இந்த உந்துதலை ரோனி சற்றும் மதிக்காமல் Lee Haney யின் சாதனையை முறியடிப்பதில் குறியாக இருந்தார். இவர் எந்த அளவு முரட்டு சாமியார் என்றால், முதுகு தண்டில் ஸ்குரூ போட்டபிறகும் அந்த ஸ்குரு உடையும் வரை பயிற்சி செய்துள்ளார். இது இவரது உள்காயங்களை மேலும் அதிகமாக்கியது.

4) பாடிபில்டிங் ஈகோ

தன்னுடைய அறுவை சிகிச்சையின் காரணமாக விரைவாக சுருங்கும் தன் தசைகளை மனதளவில் ஏற்கமுடியாத நிலையில் ரோனி தன் வைராக்கியத்தை விட்டுக்கொடுக்காமல் நாலைந்து முறை தொடர்ந்து அறுவை சிகிச்சைக்குப் பிறகும் பயிற்சிகளை செய்வதை நிறுத்தவில்லை. ஏன் தன்னால் சரியாக நடக்க முடியாத பொழுதும் கூட தன்னை சிரமப்படுத்தி பயிற்சிகளைத் தொடர்ந்து செய்தார். இதை சமூகவலைத்தளத்தில் ஒரு ட்ரெண்ட் ஆக மாற்றி. **சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறைவதுண்டோ என்று ஒரு கும்பல் இவரை உசுப்பேற்றி உசுப்பேற்றி உடலை ரணப்படுத்தியது தான் மிச்சம். பாடிபில்டிங் உலகின் ஸ்டெராய்டு குருவான David Palumbo-வை இப்பொழுது பார்த்தால் அவ்வளவும் சுருங்கி ஒரு மரத்தான் ஓட்டக்காரர் போல் காட்சியளிக்கிறார். நீங்கள் ஏன் இப்படி இருக்கிறீர்கள் என்று கேட்ட பொழுது “Never Affraid to recreate yourself”(உங்களை மாற்றி அமைத்துக் கொள்ள யாருக்காகவும் எதற்காகவும் நீங்கள் பயப்பட வேண்டாம்) என்று கூறினார். எனக்கு 53 வயது ஆகிறது இந்த வயதில் பாடிபில்டிங் பயிற்சிகள் எனக்கு எந்த வகையிலும் நன்மை பயக்கப் போவதில்லை. அதற்கு பதிலாக நான் வாரத்திற்கு இரண்டு நாள் functional ட்ரெய்னிங் செய்கிறேன். நான்கு நாட்கள் கார்டியோ பயிற்சி செய்கிறேன். இதுவே என்னுடைய ஆரோக்கியத்திற்கு இன்று தேவை என்று கூலாக பதில் சொல்கிறார்.

5) ரோனி தன் பயிற்சித் திட்டத்தில் எந்த விதமான பயிற்சிகளும் Functional ட்ரெய்னிங் பயிற்சிகளும் செய்யாதது

நான் பார்த்த வரையில் ரோனியின் பயிற்சித் திட்டத்தில் எந்த விதமான Deep Core Stabilization (அதாவது உங்கள் மூட்டுக்களையும் முதுகு தண்டையும் தாங்கிப் பிடிக்கும் சிறிய தசைகளுக்கான பயிற்சி) பயிற்சிகளையும் காணமுடிவதில்லைஇதன் காரணமாக இந்ததசைநார்கள் வலுவிழந்து விடும் அபாயம் உள்ளது. வெளியில் இருக்கும் Mobilizer தசைகளை மட்டும் பாடிபில்டிங் பயிற்சிகளின் மூலம் பெரிதுபடுத்திக் கொண்டேபோனால், உள்ளே வலுவிழந்து இருக்கும் இந்த டீப்கோர் தசைகள் உடல் எடையையும் பயிற்சிகளில் பயன்படுத்தும் அதிகப் படியான எடையையும் தாங்கிப்பிடிக்கும் சக்தி இல்லாமல் நேரடியாக மூட்டுகளிலும் முதுகுத்தண்டிலும் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் ரோனியின் பயிற்சி முறையில் நிறைய jerking மற்றும் bouncing உத்திகளை பயன்படுத்தி அதிகப்படியான எடையை தூக்குவார். இது மேலும் மூட்டுகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும்.

6) அதிகப்படியான ஸ்டெராய்டு உபயோகம்

பாடிபில்டிங் உலகின் மூன்று சகாப்தங்களையும் உற்று நோக்கினால் மூன்று வகையான ஸ்டெராய்டு உபயோகத்தை காணலாம். அர்னால்டின் Era-வில் 500mg | முதல் 1000 mg வரை இருந்தது.. மற்றும் டொரியன் காலத்தில் 1500 mg முதல் 2000 mg வரை உயர்ந்தது. மேலும், HGH, Insuline போன்ற புதுவகை மருந்துகளும் சேர்ந்துகொண்டன. இது ரோனியின் காலத்தில் சர்வ சாதாரணமாக 5000 mg தொட்டது. இந்த மிதமிஞ்சிய ஸ்டெராய்டு உபயோகம் பாடிபில்டிங் துறையை பாழ் அடித்துவிட்டது. அமெச்சூர் பாடிபில்டர்கள் கூட இன்று சர்வ சாதாரணமாக 2000 mg பயன்படுத்துகிறார்கள். இது எங்கு சென்று முடியுமோ! எப்படிப் பார்த்தாலும் ரோனி தன் வாழ்வில் ஒரு இருபது ஆண்டு காலமாவது ஸ்டீராய்டை பயன்படுத்தியிருப்பார். இதன் விளைவாக எலும்புகள் வலுவிழந்திருக்கக் கூடும். இது கூட ரோனியின் இடுப்பு எலும்பு தேய்மானத்திற்கு காரண மாக இருந்திருக்கலாம்.

The KING என்ற ரோனியின் கடைசி ஆவணப்படத்தை எந்த பாடிபில்டிங் ரசிகர் பார்த்தாலும் அவர்களின் கண்களில் நீர் பெருக்கெடுக்கும். Low weight boby என்று கத்திக்கொண்டு அசுரத்தனமான உடல்வாகுடன் 800 பவுண்டு தூக்கிய ரோனியை காட்டிவிட்டு, இன்று அதே ஜிம்மில் ஊன்றுகோலுடன் பயிற்சிகளை செய்யும் ரோனியை பார்த்தால் ரத்த கண்ணீர் தான் வருகிறது. ரோனியின் ஒரு நிரந்தரமான வலி முகத்தில் கவ்விக் கொண்டிருப்பதை இந்த ஆவணப்படம் முழுவதும் காணலாம். இன்று பல மில்லியன் டாலர் சொத்துக்கு சொந்தக்காரரான ரோனி தன் ஆடமுடியாமல் சொந்த குழந்தைகளுடன் ஓடி தவிப்பதை பார்த்தால் மிகவும் பாவமாக உள்ளது. இந்த ஆவணப்படத்தில் வரும் ஒரு பேட்டியில் உங்கள் உடல்வலியை ஒன்றிலிருந்து பத்து வரை வரையறுத்து சொன்னால் எவ்வளவு இருக்கும் என்று கேட்டபொழுது, ரோனி தன் இரும்பு நெஞ்சத்துடன் 20 என்று சொன்ன காட்சி என் கண் முன்னால் இன்னும் நிற்கிறது. தவறான திடதீர்மானம் ஒரு மனிதன் வாழ்வை எங்கு கொண்டுசெல்கிறது என்றுபார்த்தீர்களா!இன்று வரை பாடிபில்டிங் உலகம் இவர் எப்படி உள்ளார் என்பதை மறைத்தே வருகிறது. ஏனெனில் ரோனியின் வாழ்க்கை பாடிபில்டிங் துறைக்கு ஒரு தவறான முன்னுதாரணமாக ஆகிவிடும். அது மட்டுமல்லாமல் பாடிபில்டிங் துறை சார்ந்த வியாபாரத்திற்கு பாதகமாக மாறும் என்ற நோக்கமும் காரணமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

பின்வரும் அட்டவணையில் டொரியனையும் ரோனியையும் ஒப்புநோக்கி விளக்கியுள்ளேன்.

ஹரிஹரன் உடற்பயிற்சி துறையில் நீண்டகாலம் அனுபவம் உடையவர். NASM CIT certificate பெற்றவர். சென்னையில் ACFIT Academy for fitmess Professional என்ற நிறுவனத்தின் மூலம் NASM CPT உட்பட பல உடற்பயிற்சி சார்ந்த கல்விகளை கற்றுக் கொடுக்கிறார். பர்சனல் ட்ரெய்னிங்கும் கொடுக்கிறார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *