Ronnie மற்றும் டொரியன் ஆகிய இரு வல்லவர்கள் பற்றிதான் அடுத்த இரண்டு மாதக் கட்டுரையில் விளக்க இருக்கிறேன், இந்த இருவரில் யார் சிறந்தவர் என்பதை விட இந்த இருவரும் வாழ்வில் எடுத்த திடதீர்மானங்கள் இவர்கள் வாழ்வை எப்படி மாற்றி அமைத்தது என்பதைப் பற்றி விவரிப்பதெ என்னுடைய நோக்கம். சென்ற இதழில் டொரியன் வாழ்வின் முதல் பாதியில் அடைந்த வெற்றிகளும் அதற்கு அவர் எப்படி தயார் படுத்திக் கொண்டார் என்பதை பார்த்தோம், ஆனால் இந்த கடும் முயற்சியில் அவர் அடைந்த காயங்கள் பல, இதிலிருந்து அவர் தன்னை எப்படி மாற்றி அமைத்துக் கொண்டார் என்பதை இந்த மாதக் கட்டுரையில் பார்ப்போம்.
“ அப்ப Ronnie என்ன ஒப்புக்காக வா” இல்லை அவருக்கு நிகராக ஒப்புநோக்க”
முதலில் சென்ற மாத கட்டுரையில் சில விடுகதைகளை வைத்து இருந்தேன் அதற்கு விடை அளித்து விட்டு இந்த வார கட்டுரையை ஆரம்பிக்கலாம் என்று நினைக்கிறேன். டோரின்க்கு ஒலிம்பியா வரை செல்ல எங்கிருந்து பணம் வந்தது ? டொரியன் மறந்துகூட யாரிடமும் ஒலிம்பியா வரை ஸ்பான்சர்ஷிப் கேட்கவில்லை. மிஸ்டர் ஒலிம்பியா ஆனபிறகு வேண்டுமானால் weider உடன் பல ஸ்பான்சர்ஷிப் கையெழுத்து ஆனது. ஆரம்ப காலங்களில் அவர் பல கூலி வேலைகளில் ஈடுபட்டு பணம் ஈட்டினார் இதில் கட்டிடவேலை தொடங்கி கறிக்கடையில் தோலுரிக்கும் வேலை வரை அடங்கும். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு இவருடைய தீராத பாடிபில்டிங் ஆர்வத்தைப் பார்த்த இவரது மருத்துவர் நான் ஒரு உடற்பயிற்சி கூடம் ஆரம்பிக்கப் போகிறேன் அதன் முழு பொருள் செலவையும் நான் ஏற்றுக் கொள்கிறேன், அதை நடத்தும் வேலையை நீ செய், வரும் லாபத்தை நாம் சரி பாதியாக பிரித்துக் கொள்ளலாம் என்றார், அப்படி ஆரம்பித்தது தான் bermingham உள்ள அவருடைய டெம்பிள் ஜிம் (Tempel Gym) .
“ அட இதை விட வேறு என்ன வேண்டும் கரும்பு தின்ன கைக்கூலியா என்று இதை படிக்கும் அனைத்து பாடி பில்டர் களுக்கும் தோன்றும் ”/p>
இது ஒன்றும் குருட்டு அதிர்ஷ்டம் இல்லை நம் வாழ்வில் எதை நோக்கி தீவிரமாக உழைக்கின்றோம் அது நம்மைத் தேடி வந்து சேர்கிறது, இதை Universal law of attraction என்று கூறுவார்கள் இந்த நிகழ்வு ஏற்பட உங்கள் மனதையும் வாழ்வையும் அதி தீவிரமாக உங்கள் குறிக்கோளை நோக்கி நகர்த்த வேண்டும் டொரியன் மொழியில் கூற வேண்டுமென்றால் 100 % intensity, அப்படி ஒரு வாய்ப்பு வாழ்வில் கிடைத்தாலும் இதில் பல பேர் அதை சரியாக பயன்படுத்திக் கொள்ள மாட்டார்கள், டொரியனின் நேர்மையும் கடுமையான உழைக்கும் திறன் கொண்டு இந்த வாய்ப்பை அவர் சரியாக பயன்படுத்திக் கொண்டார், இந்த வாய்ப்பை அளித்த அந்த டாக்டர் என்ன கூறினார் என்றாள், இதில் நீ தப்பு கணக்கு காட்ட நிறைய வாய்ப்புகள் இருக்கிறது நான் பணம் போடுவதோடு சரி, இந்த உடற்பயிற்சி கூடத்திற்கு தேவையான பயிற்சி சாதனங்களை வாங்குவதிலிருந்து ஜிம் உறுப்பினர்களிடம் பணம் வாங்குவது வரை நீயே செய்யப் போகிறாய், ஆனால் எனக்கு உன் மீது நம்பிக்கை இருக்கிறது நீ அப்படி செய்ய மாட்டாய் என்ற வார்த்தை அளவு நம்பிக்கையிலேயே நான் இந்த வியாபார உடன்படிக்கை துவங்குகிறேன் என்று சொன்னார். இன்றளவில் டெம்பிள் ஜிம்மை கடைசியாக தானே சொந்தமாக வாங்கும் வரை இவரை நம்பி முதலீடு செய்தவரை ஏமாற்றாமல் அவரை மகிழ்ச்சியாக வைத்து தன் குறிக்கோளையும் அடைந்தார். இதுவரை நடந்து முடிந்த கதை முழுவதும் ராமாயணத்தில் சீதையை பிரிந்த ராமன், ராவணனைக் கொன்று சீதையை மீட்டான் என்ற அரைகுறை கதைதான்.
“ எனது இராமாயணம் இராவணனை கொன்றதோடு முடியவில்லையா ? ”
அதற்கு பிறகு ராஜா ராமன் பட்ட துயரத்திற்கு அளவே இல்லை உண்மையில் ராமாயணத்தின் Reality touchச்சே இந்த இரண்டாம் பாதியில் தான் ஆனால் இதை பல பேர் படிப்பதே இல்லை, ராமாயணத்தை எழுதிய வால்மீகியெ ராமர் பட்டாபிஷேகத்துடன் நிறுத்திவிடலாம் என்று யோசித்தார்.
“ ஐயோ சார் இதோடு போதும் உங்க ராமாயணம் நீங்கள் நம்ம கதைக்கு வாங்க ”
டோரினக்கு ஏற்பட்ட ட்ரைசெப்ஸ் tendon காயம் அவருடைய ஒலிம்பியா வாழ்க்கைக்கு முடிவு கட்ட ஆரம்பித்து விட்டது, தனது ஆறாவது ஒலிம்பியாவில் ஒட்டிக்கொண்டிருந்த triceps tendonடன் நாசருடன் (Nasser ) போட்டி போட வேண்டியதாயிற்று.1997ஆம் ஆண்டு ஒலிம்பியா வெற்றிகூட ஒரு சர்ச்சைக்குரிய வெற்றி ஆகவே மாறியது, ஏனெனில் டொரியன்னின் இடதுகை weakness பிரண்ட் டபுள் biceps போஸில் வெளிப்படையாகவே தெரிந்தது, ஆனால் மீதமுள்ள ஆறு compulsory போஸ்களில் அந்த மேடையில் இருந்த மற்ற பாடி பில்டர் களால் வெல்ல முடியாது. 97ம் ஆண்டு ஒலிம்பியா போட்டிக்கு இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்பிருந்தே அவர் வெவ்வேறு உபாதைகளுக்கு ஆளானார், முதலில் இந்த ட்ரைசெப்ஸ் வலியை தாங்க எடுத்துக்கொண்ட anti-inflammatory மாத்திரைகள் அவர் வயிற்றின் உள் சுவரை அழித்துவிட்டது இதன் காரணமாக தொடர் வயிற்றுப்போக்கு ஆளானார், மேலும் ஒட்டிக்கொண்டிருந்த Trice p tendonவைத்துக்கொண்டு பயிற்சிகளை செய்து இருக்கும் தசையை மெயின்டெய்ன் செய்யவே கஷ்டப்பட்டார். அந்த tricep tendon எந்த அளவுக்கு பலவீனமாக இருந்தது என்றால் போஸிங் செய்யும் பொழுது சற்று அழுத்தம் கொடுத்தால் கூட அருந்துவிடும் என்ற நிலையில் இருந்தது. பொதுவாக இந்த ஒலிம்பியா மேடைகளில் வெற்றி பெறும் அனைத்து பாடி பில்டர்களின் ஒரே கனவு என்னவென்றால் lee haneyயன் எட்டு முறை தொடர் வெற்றி சாதனையை முறியடிக்க வேண்டும் என்பதே ஆகும். ஏற்கனவே 6 வென்ற டோரினக்கு இது ஒரு எளிமையான குறிக்கோள், ஆனால் இந்த நிலையில் டொரியன் எடுத்த திடதீர்மானம் அவர் வாழ்வை காப்பாற்றியது மட்டும அல்லாமல் மாற்றியமைத்தது.
ஆறாவது ஒலிம்பியா விற்கு பிறகு டொரியன் மனதில் தோன்றியது என்னவென்றால் இனியும் இந்த வலியும் வேதனையும் தேவையா ? தான் அனுபவித்து ரசித்து செய்த பாடி பில்டிங் ஒரு வேலை ஆக மாறிவிட்டது, இந்த ட்ரைசெப்ஸ் சரி செய்தால் கூட நான் பழையபடி நூறு சத பயிற்சி தீவிரத்துடன் பயிற்சிகளை செய்ய முடியுமா ? அப்படி தன்னுடைய 100 சத உழைப்பை தராமல் உலகின் நம்பர் ஒன் பாடி பில்டர்கள் உடன் நின்று வெல்ல முடியுமா , டோரினக்கும் weider இருந்த வியாபார ரீதியான நட்பின் காரணமாக அவர் ஏதாவது செய்திருக்க முடியும், ஆனால் டோரியனின் மனம் எந்த ஒரு குறுக்குவழி க்கும் இடம் தரவில்லை. மாறாக தான் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து விட்டார். அதுவரை அவர் பயன்படுத்திக் கொண்டிருந்த அனைத்து ஸ்டெராய்டு களையும் ஒரே நாளில் விட்டுவிட்டார், ஸ்டெராய்டு என்னும் அந்த அசுர மருந்து உடலில் உள்ள வரையே உடல் அந்த அசுர வடிவில் இருக்கும், இப்படி ஒரே நாளில் இந்த மருந்துகளை நிறுத்துவதால் அவருடைய தசைகள் மளமளவென்று size குறையத் துவங்கி விட்டது, மேலும் tricepsஇன் உட்காயம் காரணமாக பயிற்சிகளையும் தொடர முடியவில்லை, இதுவரை எதைத்தான் என்றும் எதை தனது வாழ்க்கை என்றும் நினைத்தாரோ அது ஒரு சில நாட்களில் மறையத் துவங்கிவிட்டது இதன் காரணமாக தீராத மன அழுத்தத்துக்கு தள்ளப்பட்டார்.
தன்னுடைய 20 ஆண்டு கால கடும் தவம் ஒரு சில மாதங்களில் முடிவடைந்தன, இனி தான் யார் இந்த உலகத்தில் என்ற கேள்வி அவர் வாழ்வில் மேலும் மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தியது, இந்த நெருக்கடியான காலகட்டத்தில் அவருடைய குடும்ப வாழ்வும் முறிந்துவிட்டது. இரண்டு குழந்தைகளுடன் இருந்த அவர் மனைவியையும் விவாகரத்து செய்து விட்டார். பொதுவாக இந்த நிலைக்கு தள்ளபடுபவர்களுக்கு வாழ்வில் மூன்று வழிகள் தான். ஒன்று தற்கொலை அல்லது கொலை முயற்சியில் ஈடுபடுவார்கள், 2 குடி,லேடி, பிடி என்று தங்கள் வாழ்வை அழித்துக் கொள்வார்கள் ,மூன்று நம்ம ஊர் காரர்களாக இருந்தால் சாமியார் ஆகி விடுவார்கள். இதில் டொரியன் இரண்டாவது வழியை தேர்ந்து எடுத்துக் கொண்டார். பொதுவாக தங்கள் வாழ்நாள் முழுவதையும் ஒரு குறிப்பிட்ட குறிக்கோளுக்கு அர்ப்பணித்து தங்கள் வாழ்வின் அனைத்து சுகத்தையும் ஒதுக்கிய மனிதர்கள் இந்த வழிக்கு போனால் திரும்புவதே இல்லை, இவர்கள் சம்பாதித்த பணமும் புகழும் சில ஆண்டுகளில் மறைந்து நடுத் தெருவிற்கு வந்து விடுவார்கள். ஆனால் டோரின் இதையும் வாழ்வின் ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டார். இந்தக் கட்டத்தில் டொரியன் வாழ்வின் அனைத்து போகத்தையும் அளவுக்கு அதிகமாக அனுபவிக்க துவங்கினார்.இது எந்த அளவுக்குச் சென்றது என்றால் உலகிலுள்ள தலைசிறந்த பார்களிஇன் பார்மன் முதல் வாயில் காவலர்கள் வரை டொரியன்நுகு பரிச்சயம் ஆகும்வரை வாழ்வை ஊதித் தள்ளினார். டொரியன் வாழ்வில் எதை செய்தாலும் 100 சதம் தான் அதற்கு இதுவும் விதி விலக்கு அல்ல, அவருடைய போதைப் பொருட்களின் தேடல் அமேசான் காடு வரை சென்றது. இந்த பித்து ஆன (crazy mind set) மனநிலையில் அவர் செய்த ஒரே நல்ல விஷயம் உடற்பயிற்சிகளை வாரத்திற்கு மூன்று நான்கு முறையாவது தொடர்ந்து செய்து வந்தார், அவரைப் பொருத்தவரை தீவிர உடற்பயிற்சி செய்யும் பொழுது அவரின் மனம் ஒரு தவ நிலைக்கு செல்வதை உணர்ந்து கொண்டார். இதை அடிக்கடி அவர் mental zone என்று குறிப்பிடுவார். இந்தக் கட்டத்தில் அவர் வாழ்வில் அடுத்தகட்ட திடதீர்மானத்துக்கு வந்தார்,இந்த போகம் தன் வாழ்வில் எந்த நிலைக்கும் எடுத்து செல்ல போவது இல்லை அப்பொழுது வாழ்வின் அர்த்தம் தான் என்ன ? என்ற கேள்வி அவரை வாழ்வின் நாலாவது பரிமாணத்திற்கு அழைத்துச் சென்றது, இதற்கான விடை தேடலை டொரியன் எப்பொழுதும் போல் எந்த குருவையும் தேடாமல் தானே ஆராய்ச்சி செய்யத் தொடங்கினார். இந்தக் கேள்விக்கான பதிலை அனைத்து மதப் புத்தகங்களிலும் தேடினார், உலகில் உள்ள அனைத்து மதங்களும் இந்த கேள்விக்கு தரும் ஒரே விடை வாழ்க்கை ஒரு அன்பின் பிரவாகம், எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் அன்பை ஒவ்வொரு மனிதரும் அடுத்த உயிர்களுக்கு பரிமாறும் பொழுது அவன் வாழ்க்கை ஒரு வசந்தம் ஆக மாறிவிடுகிறது என்பதுதான் அது.
டொரியன் வாழ்வில் இதை செய்ய ஒரே வழி தன் வாழ்வின் அனுபவங்களை எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் அனைத்து உடற்பயிற்சி ஆர்வலர்களுக்கும் பகிர்வது தான் என்ற முடிவுக்கு வந்தார். இதற்கு இவர் பயன்படுத்திய வழிதான் லண்டன் ரியல் (london real) என்கிற பாட்காஸ்ட்(pod cast) சேனல். லண்டன் ரியல் என்பது பிரையன் ரோஸ் (Brayan Rose) என்பவரால் துவக்கப்பட்ட ஆன்லைன் டிவி, இதில் வாழ்வில் வித்தியாசமான அனுபவம் பெற்ற ஒவ்வொரு துறை சார்ந்த வல்லுநர்களின் பேட்டி உள்ளது, இதில் Dorian yates பெட்டி நிறைய பார்வை நேரத்தை பெற்று உள்ளது. இந்தப் பேட்டி லண்டன் ரியல் சந்தாதாரர் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தது. இந்த பேட்டியின் காரணமாக பெருவாரியான மக்கள் தங்கள் வாழ்க்கை முறை மாற்றத்திற்கு டொரியன் வாழ்வை ஒரு முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டார்கள். பிரைன் ரோஸ் டொரியன் என் வாழ்வில் ஏற்பட்ட இந்த வாழ்க்கை முறை மாற்றத்தின் உற்சாகமடைந்து மூன்று முறை லண்டன் ரியல் டிவியில் டொரியன் வாழ்வின் வெவ்வேறு தருணத்தில் மூன்று வித்தியாசமான பேட்டிகளை எடுத்தார், இந்த மூன்று பேட்டிகளும் கடந்த 7 ஆண்டுகளில் தோரியம் வாழ்வின் வெவ்வேறு தருணங்களில் எடுக்கப்பட்டவை, இதில் ஒவ்வொரு முறை பேட்டி எடுக்கும் பொழுதும் டொரியன் வாழ்வு வியக்கத்தகு வகையில் மாற்றம் அடைந்திருந்தது இதில் உற்சாகமடைந்த பிரையன் ரோஸ் டொரியன் பற்றி indise the Shadow என்கிற ஆவணப் படத்தையும் எடுத்து வெளியிட்டார், இதனால்தான் சென்ற இதழில் ஒலிம்பியாட் டொரியன் ஐ விட லண்டன் ரியல் டொரியன் தான் இன்று நிறைய பேருக்கு தெரியும் என்று குறிப்பிட்டு இருந்தேன். High Intensity பாடி பில்டிங்கில் துவங்கிய அவர் வாழ்க்கை இன்று பல்வேறு பரிணாமங்களை கடந்து தியானம் யோகம் உடற்பயிற்சி என்று உருமாற்றம் பெற்று விட்டது. இன்று டோரின் ஸ்பெயினில் உள்ள marbayவில் ஒரு அமைதியான சூழ்நிலையில் தன் வாழ்க்கை அனுபவங்களை அடுத்தவர்களுக்கு பயன்பெறுமாறு பகிர்ந்து கொண்டு ஆனந்தமாக வாழ்நாளை கழிக்கிறார், நீங்களே சொல்லுங்கள் இது ஒரு அருமையான வாழ்க்கை முறை மாற்றம் தானே ?
“Now the Shadow has been transformed to Light”
“ஒரு நிழல் ஒளியாக மாறி விட்டது ”
டோரி என் வாழ்வின் மீது மேலும் ஆர்வம் உள்ளவர்கள் யூடுபில் உள்ள inside the shadow என்ற ஆவணப்படத்தை பாருங்கள் மேலும் விருப்பப்பட்டால் London Real Dorina yates என்று டைப் செய்தால் அவருடைய மூன்று பேட்டிகளும் யூ டியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
Rhonnie பற்றி சொல்ல நிச்சயமாக எனக்கு இன்னும் ஒரு கட்டுரை தேவை….
Transformation Continues……..