வாழ்க்கை அனைவருக்கும் வாழ்வதற்கான வாய்ப்பை சமமாகவே அளித்துள்ளது, இதில் அவரவர்களின் திடதீர்மானமே அவர்களின் வாழ்வை நிர்ணயிக்கிறது. நீங்கள் ஏழையாக வாழ்வதும் பணக்காரராக வாழ்வதும், ஆரோக்கியம்மனவராக வாழ்வதும் ஆரோக்கியம் அற்றவராக வாழ்வதும் உங்களின் தனிப்பட்ட தீர்மானமே. இந்த வாய்ப்பு மனிதனை தவிர வேறு எந்த உயிர்களுக்கும் அளிக்கப்படவில்லை, இதைத்தான் பைபிளின் ஆதாம் ஏவாள் கதை உருவகப்படுத்தி உள்ளது. அறிவு என்னும் கனியை தொடாமல் ஈடன் தோட்டத்தில் நீங்களும் ஒரு விலங்கினமாக சுற்றித் திரியலாம் இல்லையேல் கனியை உண்டு தோட்டத்தை விட்டு வெளியேறலாம் ஆனால் இந்தக்கதை இத்துடன் முடியவில்லை அறிவுக்கனிஇன் பயனற்ற தன்மையை உணர்ந்து கொண்டால் நீங்கள் திரும்பவும் தோட்டத்திற்கு வரலாம் என்ற கருணையான * குறிப்பை அந்த ஆப்பிளில் சிறிய எழுத்துக்களில் எழுதிவைத்துள்ளார் இதை மறந்தால் வாழ்க்கை ஒரு பெரும் குழப்பமாக மாறிவிடுகிறது.
அறிவு பயனற்றுப் போக முடியுமா ?
எந்த ஒரு அறிவு சார்ந்த விஷயமும் தொடர்ந்து மாற்றம் அடைந்து அப்படியே இருக்கிறது ( சிறந்த எடுத்துக்காட்டாக அறிவியல் எடுத்துக்கொள்ளலாம்) இதை உணர்ந்து கொண்டு நீங்கள் கற்ற விஷயங்களை எந்த நிலையிலும் மாற்றி கற்கும் (Un learn) திறந்த மனநிலையுடன் இருக்க வேண்டும். இந்த மனநிலையே உங்களை ஈடன் தோற்றத்திற்கு இட்டுச் செல்லும். ஈடன்னை விட்டு வெளியேறுவது ஒரு அரை வட்டம் என்றால் திரும்பவும் உள்ளே வருவதுதானே அதை முழுமைப்படுத்துகிறது
“ Boss எங்க தளபதியே எப்பவஓ சொல்லிவிட்டார் வாழ்க்கை வாழ்க்கை என்பது ஒரு வட்டம் இதுக்கும் பாடிபில்டிங்கும் வில்லுக்கும் என்ன சம்பந்தம் ? ”
ஐயோ நான் இன்னும் புள்ளியே வைக்கவில்லை அதற்குள் வட்டத்தை முடிக்க சொன்னால் எப்படி wait and see.
திட தீர்மானம் நம் மனதில் எந்த நிலையில் ஏற்படுகிறது, அதை எந்த நிலை வரை எடுத்துச் செல்ல வேண்டும் ? எந்த நிலையில் அது மாற்றம் பெற வேண்டும் என்பதைப் பொறுத்தே ஒரு தனி மனிதன் வாழ்க்கை நிர்ணயிக்கப்படுகிறது. முழு விழிப்புணர்வோடு எடுக்கும் திடதீர்மானமே உங்கள் வாழ்வை செம்மை படுத்துவதாக இருக்கிறது. இதற்கு உங்கள் மனதை ஒரு குறிப்பிட்ட காலம் தயார் படுத்த வேண்டியுள்ளது. உணர்வற்ற நிலையில் உணர்ச்சி வேகத்தில் எடுக்கும் தீர்மானங்கள் நீர் மேல் எழுத்து போல் கலைந்து விடுகிறது அல்லது உங்கள் ஆழ்மனதில் சென்று நிரந்தரமான பாதிப்பை ஏற்படுத்திவிடுகிறது.
எடுத்துக்காட்டு 1) நியூ இயர் ரெசல்யூசன் கள் (New Year Resolution) கையில் கோப்பையுடன் செய்யும் நாளை முதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம்.தீர்மானங்கள் நீர் மேல் எழுத்து போல் கலைந்து விடுகிறது
எடுத்துக்காட்டு 2) ஒரு கோபத்தில் அவனை அழிக்காமல் விடமாட்டேன் பழி தீர்க்காமல் விடமாட்டேன் என்கின்ற சபதங்கள்( சினிமாவில் வேண்டுமென்றால் நன்றாக இருக்கும் நிஜ வாழ்க்கையின் கதைக்கு ஆகாது). உங்கள் மனநிலையும் ஒரு நிரந்தர பாதிப்பிற்கு கொண்டு செல்கிறது
ஒவ்வொரு திட தீர்மானமும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பின் மறுசீரமைத்து மாற்றி அமைக்கப்பட வேண்டும் அப்படி இல்லையேல், அந்த தீர்மானங்களால் வாழ்வில் அடைந்த வெற்றிகள் ஒரு வெறுமையாக காட்சியளிக்கும் அல்லது அதன் காரணமாக உடலோ மனமோ ஒரு நிரந்தர பாதிப்புக்கு உள்ளாகி விடும் .
வாழ்க்கை பொதுவாக மூன்று வகையான மனிதர்களை கொண்டுள்ளது.
- வாழ்வின் வெற்றி ஒன்றே குறிக்கோளாக வைத்து அதை அடைவதற்காக எதையும் தியாகம் செய்ய தயாராக இருப்பவர்கள், இவர்களின் வெற்றி குறிக்கோள் பணமாகவோ புகழாகவும் இருக்கும் . இந்த குறிக்கோளை அடைய அவர்கள் வாழ்வில் எதையும் பணயமாக வைக்க துணிவார்கள். பொதுவாக இந்த வெற்றியாளர்களை உலகம் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் . இவர்களின் வாழ்வை இரண்டாகப் பிரிக்கலாம் முதல் பாதி வெற்றி அடைவதிலும் இரண்டாவது பாதி அந்த வெற்றியை தக்கவைத்துக்கொள்ளும் போராட்டத்திலேயே கழிந்துவிடும்.
- இந்த வெற்றிப்பாதையில் வழிதவறியவர்கள் வெற்றியை அடைய முடியாமல் போனதாலோ அல்லது தக்கவைத்துக் கொள்ள முடியாமல் போனதால் தவறானபழக்க வழக்கங்களுக்கு ஆளாகி தங்களைத் தாங்களே அழித்துக் கொள்வார்கள், இவர்களின் உலக வாழ்வில் தவறான முன்னுதாரணமாக ஆகிவிடுகிறார்கள்.
- இந்த இரண்டு வகையிலும் சேராமல் இருந்தும் வாழ்ந்தோம் மடிந்தோம் என்ற மனநிலையில் வாழும் சாமானியர்கள் 90 சதம் மக்கள் இந்த வட்டத்திற்கு உட்படுவார்கள் இன்று வாழ்வில் வெற்றியாளர்களாக கருதப்படுபவர்கள் அனைவரும் இந்த நிலையில் இருந்து உயர்ந்தவர்களே.
இந்த மூன்று நிலையும் அல்லாமல் வாழ்க்கைக்கு ஒரு நான்காம் பரிணாமம் உள்ளது .இந்த நான்காவது பரிணாமத்திற்கு இந்த மூன்று நிலைகளில் இருந்து வருகிறார்கள், இவர்களின் குறிக்கோள் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது இவர்கள் வாழ்வின் அர்த்தத்தை தேட துவங்கிவிடுகிறார்கள் இவர்கள் தங்களால் என்ன செய்ய முடியும் என்று யோசிப்பது மட்டுமல்லாமல் செயல்படவும் தொடங்கிவிடுகிறார்கள். இந்த நிலையை மனிதன் அடையும் பொழுது ஈடன் தோட்டத்து பூங்காற்று அவர்மேல் வீசத்தொடங்கி விடுகிறது. வாழ்க்கை ஒரு ஆனந்த கொண்டாட்டமாக மாறிவிடுகிறது, வாழ்வில் இவர்கள் எந்த முயற்சியும் இன்றி மிதந்து செல்லும் காட்சி அனைவருக்கும் உற்சாகம் அளிப்பதாக இருக்கிறது, இவர்களை வெளி உலகத்திற்கு தெரியாவிடிலும் இவர்களின் வாழ்வின் வசந்தம் காற்றில் பரவத் துவங்கி விடுகிறது.
உங்களுடைய திடதீர்மானம் இந்த வாழ்வின் நாலாவது பரிணாமத்திற்கு இட்டுச் செல்கின்றது என்றால்.
“அதுதான் உண்மையான வாழ்வியல் மாற்றம்”
(That’s The Real Life Transformation)
இந்த நாலாவது பரிணாமத்திற்கு வழிகாட்டுவதே என்னுடைய குறிக்கோளும் ஆகும். இதற்கு ஆரோக்கியமான உடல் ஒரு முக்கிய கருவியாக பயன்படுகிறது, ஆரோக்கியமான உடல் கட்டமைப்பு ஆரோக்கியமான மனதிற்கு அடிப்படையாகிறது இந்த உடலும் மனமே ஆத்ம நலனை நோக்கி இட்டுச் செல்கிறது.
சரி நான் இந்த தத்துவ நடையிலிருந்து எளிய நடைமுறைக்கு வருகிறேன், இந்த கட்டுரை பாடிபில்டிங் மற்றும் பிட்னஸ் வாசகர்களை மனதில் வைத்து எழுதுவதால், நான் மூன்று பாடி பில்டர்களின் வாழ்க்கை முறையை என்னுடைய கருத்துக்களுக்கு எப்படி ஒத்துப் போகிறது என்று விவரிக்கிறேன்.ஓகே குட் நைட் (அப்பாடா இப்பவாவது ஞாபகம் வந்ததொ).
அர்னால்ட் இவர் நான் குறிப்பிட்ட முதல் வகையான மனிதர் தன் வாழ்வின் தனக்கு என்ன வேண்டும் என்பதை வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் தானேநிர்ணயித்து அந்த குறிக்கோள்களை அடைந்த மனிதர், இவர் வாழ்வில் தோல்வி என்ற பகுதி தீண்ட விடாமல் இருப்பதற்கு எந்த பணத்தையும் தர துணிந்தவர். உலகின் 90 சதம் bodybuilder ரோல்மாடலாக விளங்கினார், பாடிபில்டிங் மட்டுமல்லாமல் தான் போக நினைத்த ஒவ்வொரு துறையிலும் நம்பர் 1 ஆக மாறிய பெருமை அர்னால்டை சேரும் அது ஹாலிவுட் ஆக இருந்தாலும் சரி அரசியலாக இருந்தாலும் சரி. பாடிபில்டிங் மற்றும் பிட்னஸ் துறைக்கு அவர் செய்தது போன்ற நன்மைகளை வேறு யாரும் செய்ததில்லை. Joe weider பின்புலனாக இருந்தாலும், இவரே முன்னின்று இந்தப் புரட்சியை நிகழ்த்தினார். ஆனால் இந்த சாதனை நாயகனின் கண்ணில் நான் எப்பொழுதும் ஒரு இனம் புரியாத வெறுமையை காண்கிறேன் என்னை பொறுத்தவரை அவருக்கு வெற்றி அலுத்து விட்டது. வாழ்வின் வேறு பரிணாமங்களில் அவருக்கு எந்த பெரிய ஈர்ப்பும் இல்லை. உலகத்தைப் பொறுத்தவரை அவர் ஒரு வெற்றி நாயகன் அவரைப் பொருத்தவரை அவருடைய வெற்றிகள் சொற்ப கால சொர்க்க வாசலையே திறந்தன. அவருடைய புகழ் காலத்தால் அழித்துவிடும் என்பதை உணர்ந்ததால் என்னவோ அவருடைய சிலைக்கு கீழே படுத்து உறங்கினார்.
“How Times Have Changed.”
என்ற வாசகத்துடன் தன்னுடைய தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட புகைப்படம் தான் இது.
மேலும் transformation கதைகள் தொடரும்